காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணில்
கண்ணுக்குள் நீதான் என் கண்ணீரில் நீதான்
கண்மூடி பார்த்தல் என் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்..............................(காதல் ரோஜாவே)
வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்றுபோ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்துபோ
பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்து போ
பாவயில்லை பாவை தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவையென்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல் ............................(காதல் ரோஜாவே)
For more song lyrics and best selected youtube videos, visit all posts