Sunday, 2 August 2015

JEEVANE JEEVANE





ஜீவனே  ஜீவனே  எங்கு  போனாயோ
கேட்குதே  உன் குரல்  நேரில்  வாராயோ
கண்களில் உன் முகம்
எந்தன்முன்  தோன்றுதே
காலடி  தேடியே  பாதைகள்  நீளுதே
நான் ஓய்ந்திடாமல் தேடி வந்து உன்னை சேருவேன் .....   (ஜீவனே  ஜீவனே)


தீபமென சுடரும் விழி சுடரொளியே
உனை காற்றினிலும் அனைய விடமாட்டேன்
உயிருக்குள்ளே உயிர் கலந்த உயிர் ஒளியே
உனை ஒரு பொழுதும் வெளியில் விட மாட்டேன்
எனக்குள் உன்னை தூங்கவைத்து எனது மூச்சால் மூடுவேன்
இரவும் பகலும் விழித்து இருந்து
உன்னை பார்த்தே வாழுவேன்
நான் ஓய்ந்து ஓய்ந்து போகும் போதும்
உன்னை தேடுவேன் .........................................................................(ஜீவனே  ஜீவனே)


கருவறையில் உறங்கும் ஒரு குழந்தையென
என் இதயத்திலே உனை  சுமந்து வாழ்வேன்
கடவுள் வந்து எதிரில் நின்று கேட்டாலும்
நான் எனை தருவேன் உன்னை தர மாட்டேன்
காலம் நன்றே என்று ஆக  உன்னை கண்டேன் கண்மணி
சோகம் இன்றே நின்றுபோக வந்து சேர்ந்தாய் கண்மணி
இது காதல் காலம் வாழ்த்தும் கீதம்
எங்கும் கேட்குதே  ..............................................................................(ஜீவனே  ஜீவனே)


தேவியே தேவியே தென்றல் தாலாட்ட
சோகமே தீர்ந்ததால் நெஞ்சில் தேனூற
மயில்களின் இறகினால் உன் முகம் வருடுவேன்
காதலின் அமுதினை இதயத்தால் பருகுவேன்
அந்த காதல் தேவன் ஆணை என்ன சொல்வதாரடி.......


No comments:

Post a Comment