பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல் ......................(பூவே செம்பூவே)
நிழல் போல நானும்
நடைபோட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட
நிறம் மாற கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள்தோறும் நெஞ்சில் நானேந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல் ......................(பூவே செம்பூவே)
உனைப்போல நானும் ஒரு பிள்ளைதானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளைதானே
உனைப்போல நானும் மலர்சூடும் பெண்மை
விதியென்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல் ......................(பூவே செம்பூவே)
For more song lyrics and best selected youtube videos, visit all posts
No comments:
Post a Comment