Saturday, 8 August 2015

POOVE SEMPOOVE





பூவே செம்பூவே   உன் வாசம் வரும்
வாசல் என் வாசல்   உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல் ......................(பூவே செம்பூவே)



நிழல் போல நானும்
நடைபோட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட
நிறம் மாற கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள்தோறும் நெஞ்சில் நானேந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல் ......................(பூவே செம்பூவே)



உனைப்போல நானும் ஒரு பிள்ளைதானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளைதானே
உனைப்போல நானும் மலர்சூடும் பெண்மை
விதியென்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல் ......................(பூவே செம்பூவே)




For more song lyrics and best selected youtube videos, visit all posts

Tuesday, 4 August 2015

PULVELI PULVELI

 

புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் கிள்ளி எழுப்புது எழுப்புது ஏனம்மா
 இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா.............................................(புல்வெளி புல்வெளி)



சிட் சிட் சிட் சிட் சிட் சிட்  சிட்  சிட்டுக்குருவி
சிட்டாக செல்லும் சிறகைத் தந்தது யாரு
பட்  பட்  பட்  பட்  பட்  பட்  பட்  பட்டாம்பூச்சி
பலநூறு வண்ணம் உன்னில் தந்தது யாரு
இலைகளில் ஒளிகின்ற பூக்கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில்க்கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்

பூவனமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்             அம்மம்மா..........
வானம் திறந்திருக்கு பாருங்க
எனை வானில் ஏற்றி விட வாருங்கள்.......................(புல்வெளி புல்வெளி)



துள் துள் துள் துள் துள் துள் துள் துள்ளும் அணிலே
மின்னல் போல் போகும் வேகம் தந்தது யாரு
ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்லென ஓடும் நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு
மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி

பூவனமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்             அம்மம்மா..........
வானம் திறந்திருக்கு பாருங்க
எனை வானில் ஏற்றி விட வாருங்கள்.......................(புல்வெளி புல்வெளி)

  

For more song lyrics and best selected youtube videos, visit all posts

Sunday, 2 August 2015

JEEVANE JEEVANE





ஜீவனே  ஜீவனே  எங்கு  போனாயோ
கேட்குதே  உன் குரல்  நேரில்  வாராயோ
கண்களில் உன் முகம்
எந்தன்முன்  தோன்றுதே
காலடி  தேடியே  பாதைகள்  நீளுதே
நான் ஓய்ந்திடாமல் தேடி வந்து உன்னை சேருவேன் .....   (ஜீவனே  ஜீவனே)


தீபமென சுடரும் விழி சுடரொளியே
உனை காற்றினிலும் அனைய விடமாட்டேன்
உயிருக்குள்ளே உயிர் கலந்த உயிர் ஒளியே
உனை ஒரு பொழுதும் வெளியில் விட மாட்டேன்
எனக்குள் உன்னை தூங்கவைத்து எனது மூச்சால் மூடுவேன்
இரவும் பகலும் விழித்து இருந்து
உன்னை பார்த்தே வாழுவேன்
நான் ஓய்ந்து ஓய்ந்து போகும் போதும்
உன்னை தேடுவேன் .........................................................................(ஜீவனே  ஜீவனே)


கருவறையில் உறங்கும் ஒரு குழந்தையென
என் இதயத்திலே உனை  சுமந்து வாழ்வேன்
கடவுள் வந்து எதிரில் நின்று கேட்டாலும்
நான் எனை தருவேன் உன்னை தர மாட்டேன்
காலம் நன்றே என்று ஆக  உன்னை கண்டேன் கண்மணி
சோகம் இன்றே நின்றுபோக வந்து சேர்ந்தாய் கண்மணி
இது காதல் காலம் வாழ்த்தும் கீதம்
எங்கும் கேட்குதே  ..............................................................................(ஜீவனே  ஜீவனே)


தேவியே தேவியே தென்றல் தாலாட்ட
சோகமே தீர்ந்ததால் நெஞ்சில் தேனூற
மயில்களின் இறகினால் உன் முகம் வருடுவேன்
காதலின் அமுதினை இதயத்தால் பருகுவேன்
அந்த காதல் தேவன் ஆணை என்ன சொல்வதாரடி.......